பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 இலக்கிய ஏந்தல்கள் ஏற்பட்ட தழும்புகளாகத் தெரிகின்றன; சொற்களிற் சோக உணர்ச்சிச் சிதறல்களாகத் தெரிகின்றன "இரவெனும் வறுமையின் கந்தல் உடை தனில் எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?' என்று பாடுகின்றார் கவிஞர்

  • கண்ணம்மா” எனுங்கவிதை காதல் எனும் பேருணர்ச்சி இக்கவினுலகில் நிலைக்கும் வரை நின்று வாழும் நேர்த்தியான பாடலாகும். சிறந்த சொற்கள் சிறந்த முறையில் சிறந்த இடங்களில் செய்யப்பட்டிருக்கும் பாங்கினை இக்கவிதையில் காணலாம். சான்றிற்கு இதோ: சில கவிதை நறுக்குமணிகள்.

"மஞ்சள் கரைத்து விட்டாள்-கண்ணம்மா மாணிக்க ஓடையிலே! நெஞ்சங் கரைந்து விட்டேன் மஞ்சளாய் நீந்திரீ ராடுகிறேன்.” - - ... ~ · · · · · • • • • • • • உள்ளம் எழுதி விட்டாள்-கண்ணம்மா ஊற்றுநீ ரோடையிலே! கள்ளம் அழிந்துவிட்டேன்-அடியேன் காதல்ரீ ராடுகிறேன்!” 'யாத்திரை’ என்ற கவிதை கவிஞன் இதயத்தையும் அதில் எழும் எண்ணத்தையும் இயம்புவதாகும். வெகுதூரம் நான் நடந்தேன் வெள்ளி முளைக்கவில்லை! வெகுதூரம் நான் நடந்தேன் வீதி வெளுக்கவில்லை!