பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. - 177 போகும்வழி நீளமென்று புத்தி உணர்ந்தாலும் போகும்வழி யெனது போக்குக் கிசைந்தவழி -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். :1-4 என்று குறிப்பிட்டு, உழைக்காமல் யாதுபயன்? ஓய்ந்தார்க்கு வெற்றியுண்டோ? அழைக்கின்றாள் கொல்லிமலை ஆரணங்கு; செல்லுகின்றேன்! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 116 35-36 என்று கவிதையை முடிக்கின்றார் கவிஞர். "அஞ்சாமல் வாழ்க்கைக் கடலில் நீந்தினார்; ஓயாமல் உழைத்தார்; கவிதை யணங்கின் இறுதி யழைப்பையும் ஏற்றுச் சென்றுவிட்டார்" என்று தமிழ்ச் சான்றோர் டாகடர் மு. வ. அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று கவிஞர் வாழ்வு முடிந்தது. ஆயினும் கவிஞரே தம் கவிதை யில், வஞ்சகக் காலன் வருவதும் போவதுவும் வாழ்க்கை கியதியடா!-எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்ப தியற்கையடா: தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 145 11-12 என்று குறிப்பிட்டிருப்பது போன்று கவிஞர் தமிழ்ஒளி தம் இறவாத கவிதைகளால் நம்மிடை என்றும் வாழ்கின்றார்.