பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகள் முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் நின்றொளிர்வது நம் மொழி யாம் தமிழ்மொழி. தமிழ்மொழி தொன்மைச் சிறப்புடன் இலக்கியச் செல்வங்களையும் பெற்று வளமாக வாழ்ந்து வரும் வண்டமிழ் மொழியுமாகும். காலந்தோறும் இம் மண்ணில் தோன்றுகின்ற கவிஞர்கள் புதிய புதிய இலக்கிய வடிவங்களை இயற்றிச் சாவா மூவாத் தமிழிற்கு ஒப்பனை செய்து வருகின்றனர். காலத்தின் தேவைக் கேற்பக் கவிஞர் தோன்றுவர் என்பர். இம்முறையில் இந் நூற்றாண்டின் கால்நூற்றாண்டின் முடிவில் தோன்றியவர் கவிஞர் தமிழ் ஒளி ஆவர். ரக்தாட்சி ஆண்டு, புரட்டாசித் திங்கள், ஆறாம் நாள் (21-9-9124), தென்னார்க்காடு மாவட்டத்தில் நெசவாளர் கள் மிகுதியாக வாழும் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடுர் என்னும் சிற்றுாரில் திரு. பொ. சின்னையா-செங்கேணி அம்மாள் தம்பதிகட்குத் தலைமகனாகப் பிறந்தார், கவிஞர் தமிழ் ஒளி. பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் விஜயரங்கம் என்பதாகும். கவிஞர் பிறந்த ஊர்தான் ஆடுரேயொழிய,’மற்றபடிகவிஞர் வளர்ந்த ஊர், நலமிக்க நாட்டுப் பற்றாளர்க்குப் புகலிடம் தந்து, புதிய இலக்கியப் படைப்புகளுக்கும் காரணமாக அமைந்த செந்தமிழ்த் தென்புதுவையாகும். பாரதியார், பாரதிதாசன், வாணி தாசன், தமிழ் ஒளிமுதலிய கவிஞர்கள் தம் கவிதைகளைப் புனையப் புதுச்சேரி வாழ்விடமாக அமைந்தது.