பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 இலக்கிய ஏந்தல்கள் வானக் கருமுகில் மீது செழுங்கதிர் வந்து படுகின்ற வேளை வெடித்தது தென்னம் பாளை! ஞானக் குமரி,நகைத்தனள் பார், அக்தோ காற்புறமும் தென்னஞ்சோலை! நன்கு விடிந்திடுங் காலை! -தமிழ் ஒளியின் கவிதைகள். கக். 80 மேலும், தாமரைப் பெண் எனும் கவிதையில் கதிரவன் கூற்றில் வரும் பாடலில் ஒசை நயம் கொங்கித் ததும்புவ தனைக் காணலாம். மொட்டென் றிருந்தவுன் மேனியிற் காலையில் முத்தம் கொடுத்தவன் கான்-மனப் பித்தங் கொடுத்தவன் நான் :- ஒரு பொட்டென்றிேருந்தவுன் மேனி மணம்பெறப் பூத்திடச் செய்தவன் கான்-கலைக் கூத்திடச் செய்தவன் நான்! -தமிழ் ஒளியின் கவிதைகள். பக். 83 கற்பனை நயம் கவிஞர் கற்பனைச் சிறகு விரித்து வானிற் பறக்கிறார்: காணும் காட்சியினைக் கவினுற விரிக்குந் திறம் பெற்று மிளிர்கிறார். அவர் காட்டும் கற்பனை நம் உள்ளத்தில் உவகை பூக்கச் செய்கிறது. பட்ட மரம்’ எனுங் கவிதை, கவிஞர் தமிழ் ஒளியின் கற்பனை உள்ளத்தின உரைகல்லென நிற்கிறது. மொட்டைக் கிளையொடு கின்று தினம்பெரு மூச்சு விடும்மரமே!