பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 இலக்கிய ஏந்தல்கள் ஆடுங் கிளைமிசை ஏறிச் சிறுவர் குதிரை விடுத்துதவும், ஏடு தருங்கதை யாக முடிந்தன! இன்று வெறுங்கனவே! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 85-86 கார்த்திகை விளக்கினைச் சொல்ல வரும் கவிஞர், ஐப்பசித் தூதை அனுப்பிவைத்துக் கார்த்திகையைக் கைப்பிடித்த வானின் ககனத் திருவிளக்கு! -தமிழ் ஒளியின கவிதைகள். பக். 93 என்கிறார். மீன்கள் பற்றிப் பாடவந்த கவிஞர். "இரவெனும் வறுமையின் கந்தல் உடைதனில் எண்ணற்ற கண்களோ வின்மீன்கள்? (பக். 94) என வினா விடுக் கின்றார். இவருக்குப் பிச்சைக்காரர் இதயத்தின் விம்மல் கள் காலம் எழுதும் எழுத்துக்களாகத் தோன்றுகின்றன. பாரதியாரின் கண்ணம்மா’ பாட்டினை அனைவரும் அறிவர். இதே போக்கில் கவிஞரின் கண்ணம்மா” கவிதைச் சிறப்புகள் பலவும் பெற்று வீறார்ந்து விளங்கக் காணலாம். - கண்ணம்மா மஞ்சள் கரைத்து விட்டாள்-கண்ணம்மா மாணிக்க ஓடையிலே! கெஞ்சங் கரைந்து விட்டேன்...மஞ்சளாய் நீந்திரீ ராடுகிறேன்! மூழ்கிக் குளித்து விட்டாள்-கண்ணம்மா முத்துநீர் ஓடையிலே! தாழ்குழ லில்மல ராய்-அடியேன் தாவிட நீந்துகிறேன்!