உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இலக்கிய ஏந்தல்கள் குணத்தையே ஆண் கிளியாகவும், குற்றத்தைப் பெண் கிளியாகவும் உருவகம் செய்கிறார். இரண்டு கிளி களும் ஒரு கூட்டில் வாழ்கின்றன. கண்ணப்பன் கூட்டின் சொந்தக்காரன். அவனைக் கொத்துகிறது பெண்கிளி. கண்ணப்பன் வெகுண்டு அதனைப் பிரித்து வைக்கிறான். ஆண்கிளி பிரிவாற்றாமை யால் துயருறுகிறது. துயில் கொள்ளும்போது, பெண் கிளி இறந்து போனதாகக் கனவுகண்டு, அந்தக் கனவால் விருந்திப் புலம்பி உயிர் விடுகின்றது. காலையில் கண் விழித்த எசமானன் கண்ணப்பன் இதனைக் கண்டு கலங்கி, இறந்துபோன ஆண் கிளியைக் கூட்டினின்றும் விடுதலை செய்துவிடுகின்றான். ஆண் கிளியின் பெரும் பிரிவு பெண் கிளியைப் பேதுறச் செய்கிறது. மாலை நேரத்தில் வானத்தில் வந்து முளைத்த பிறைமதி வடிவில் ஆண்கிளியே வந்திருக்கிறதென்று மயங்கி, அதனை எட்டிப் பிடிக்க விண்ணுக்குப் பறந்து, அலைந்து, அலுத்துச் சோர்ந்து மண்ணில் உயிரற்று ஆண் கிளியின் உடல் கிடக்கும் புதரிலேயே வந்து விழுகிறது. உயிரற்ற இரு கிளிகளையும் கண்டு வருந்துகிறான் கண்ணப்பன். தன்னால் விளைந்த தவறு என்று எண்ணி உருகுகிறான். இதுதான் கதை, கிளியை வருணிக்கும் கவிஞர், கொவ்வைப் பழமென்ற மூக்கும்-கற்றுக் கொடுக்கின்ற செஞ்சொற்பயில்கின்ற காக்கும் செவ்வைப் படுங்குன்றிக் காற்றும்-கண்ணன் சிந்தையி லின்பம் சிறந்திடப் பண்ணும்! -1 பக். 16, என்கிறார்.