பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இலக்கிய ஏந்தல்கள் கண்ணப்பன் தன் தவறை யுணர்ந்து, தன் உள்ளப் புன்மைக்கு வருந்தி நைகிறான் : கண்மணியை நான் பிரித்த கயமைக்கு நீ வருக்தி விண்சென்றாய் இச் செய்கை உன் வன்மை! என் புன்மை. — t14. 37 ஆண் கிளியின் புதரில் பெண் கிளி விழுந்து இறந்து கிடப்பதனைக் கவிருர், இறப்பிலும் பிரியாத் தத்தை எழுதெழிற் கிள்ளை பக்கல் சிறப்பதும் சிறப்பாய்ச் செத்துத் தென்மகள் கிடந்த தேபோல் - பக். 71 கிடந்ததாக எழுதுகிறார். இச் சோகக் கதையை, எதிர்கின்ற மரங்கள்தொறும் இலைகள் தோறும் கின்ற மழைச் சிறுதுளிகள் உதிர்ந்து கண்ணிர் நித்திலங்கள் எனச் சிதறி நிறைந்ததம்மா! - EM # 7" என்று கூறி முடிக்கிறார் கவிஞர். மனிதனாகிய கண்ணப்பன் பெண் கிளியைப் பின்வருமாறு பாராட்டுகிறான். என்னினும் உன்னன்பே சிறந்த தம்மா! இருளிலும் என்னுள்ளம் இருண்ட தம்மா! பொன்னினும் மணியினும் போலா னாய் உன் புகழினும் மேலான தொன்று மில்லை! – rzést. 7 A இதுவே கவிதை உணர்த்தும் பாடம்.