பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 இலக்கிய ஏந்தல்கள் உயர்த்திப் பாடுகின்ற அந்த நிலையில்தான் அவா மனிதரைப் பாடமாட்டேன் என்று உறுதி கூறுகின்றார். எனினும் அந்த உறுதியையும் உடனே உடைத்துக்கொண்டு மனிதர் பலரைப் பாடுவதோடு அதற்கோர் அமைதியை யும் கற்பித்துக் கூறுகிறார். கண்ணதாசன் தான் கொண்ட கோட்பாடுகளில் நிலையாக இருந்ததில்லை. எனினும் அ ந் த நிலையின்மைதான் அவருடைய கவிதையை மேலும் வேகமாக இயக்கியிருக்கிறது. அவரே கூறுமாறு அவர் கத்தியையும் கேடயத்தையும் எல்லோருக் கும் அளித்திருக்கிறார், போற்றலுக்கும் துாற்றலுக்கும் எவரானாலும் அவருடைய கவிதையையே பயன்படுத்தி யாகவேண்டும். காவிய உலகில் கண்ணதாசன் செய்துள்ள சாதனைகள் சில. ஆட்டனத்தி, மாங்கனி போன்ற தொடக்க காலக் காவியங்கள் அவருடைய கற்பனை வீச்சையும் பாத்திர உருவாக்கத் திறனையும் புதுமையாகச் சொல்லும் வேட்கையையும் காட்டுகின்றன. "காற்றுக்கு முரங்கைமரம் ஆடல்போலும் கடலுக்குள் இயற்கை மடியசைத்தல் போலும் காற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும் நல்லோர்தம் அவைக்குள்ளே நடனமிட்டாள்" என்று உவமைகளை அடுக்கிச் சொல்லும் செய்தியை அணிபடக் காட்டுகின்ற போக்கை அவருடைய தொடக்க காலக் காவியங்கள் காட்டுகின்றன. பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்றவை இவரிடம் பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன. 'அன்றொருநாள் அவனுடைய பேரைக் கேட்டேன்!, என்று தேவாரம் அவரிடம் புதிய வடிவம்