உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

НА г/т. Ꮭ0Ꮽ; பெறுகிறது. ஆண்டாளின் கனாக் கண்டேன் தோழி' ாண்பது. கனவு கண்டேன் நம் காதல் கனிந்துரை' எனப் பண் பாடுகிறது. இந்த மரபில் திருப்பாவை, திரு வெம்பாவையை ஒட்டி கண்ணதாசனின் தைப்பாவை மிகப் பெரிய சொல் அலங்காரங்களோடும் தொடை நயங்களோடும் வெளிப்படுகிறது. "பிறர்காலில் தொழுதறியான் தொழுவாரைப் பிறர்க்குரையான் செருவாளிற் கைபதிப்பான் கைவாளைச் செருவில்விடான் பொருள்தோன்றக் கவிபுனைவான் கவிபாடப் பொருள்பறியான் மருள்மானை மனத்தணைவான் மனமானை மருளவிடான் இருள்வானில் நிலவிடுவான் நிலவாழ்வை இருளவிடான் கிறைமாதர் நெறிநிறையும் கிலம்காத்தான் முறைவகுத்தான் தரும்சேரன் பெற்றறியான் தழைக்கும்கோன் வஞ்சியிலும் நிறையாயோ. உலவாயோ, நிலவாயோ தைப்பாவாய்!” எனஒவ்வோர் அ டி யி லு ம் உடன்பாடும் எதிர் மறையுமாக தொடுகின்ற சொல் நலம் மிகவும் சுவைக்கத் தக்கதாகும், தமிழ் மக்களின் பண்பாட்டிற்குத்தக ஆண்டு தோறும் தொடங்கும் தைத்திங்கள வருகையினை இப் பாவைப்பாட்டு போல வேறெதுவும் சிறப்பிக்கவில்லை.