பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இலக்கிய ஏந்தல்கள் இயேசு காவியம் கிறித்துவ சமய உலகு வியந்து போற்றும் வகையில் இவருடைய இறுதிக் காலத்தில் இவரால் புனையப் பெற்றுது. கவியரங்குகளில் கண்ணதாசன் மின்னல் வீச்சாகவும் மேகப் பொழிவாகவும் அவையில் உள்ளவரைத் திகைக்க வைத்தவர். இந்த விரைந்து பாடும் ஆற்றலே பின்பு திரை யுலகில் அவர் சொல்லச் சொல்லப் பாடல்களை எழுதிக் கொள்ளும் பழக்கமாக வளர்ந்திருக்கிறது. காலில் கட்டி வந்து மருத்துவமனையில் இருந்ததனால் கவியரங்கத் திற்குப் போக முடியாத நிலையில் எழுதிய கவிதையை அவருடைய அண்ணனிடம் கொடுத்தனுப்பி அவர் படிக்கின்றார். "தொட்டதெலாம் பொன்னாகத் தொடுத்ததெலாம் பொருளாகப் பெற்றதிலே செல்வம் பெருகிக் கிடந்தாலும் கட்டிவர வில்லை எனக் கண்கலங்கி நிற்றேன்.பால் கட்டிவந்து சிலநாளாய் கட்டிலிலே போட்டதனால் கட்டிவைத்துள்ள கவிதையினைக் கட்டி அனுப்பியுள்ளேன் யாத்தவனைக் காணா அவைப் பெரியீர் மூத்தவரே படிக்கின்றார்" என்று தொடங்கியவுடனே எல்லார்க்கும் புரிகின்ற எளிய சிலேடையும், நகைச்சுவை இழையும் அரங்கத்தின் கையொலிகளைப் பெற்றுவிடுகின்றன. "சேய் சமைத்த சோற்றைச் சிந்தாமல் சிதறாமல் தாய் உண்ணும் பாவனையில் சபைநிறைந்த சான்றோரே" என்று மிக ஆழமான அரிய உவமையுடன் வெளிப் படும் அடிகள் அருவிபோல் உள்ள கவியரங்கக் கவிதையின் ஒரு பகுதியாகும். கண்ணதாசன் ஒர் ஆசுகவி. இம்