பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8Q. umr. 207 சபை வழங்கியது. நடுவணரசு 1942ஆம் ஆண்டில் மகா மகோபாத்தியாய’, என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது. சைவ சித்தாந்த வித்தகர்' என்ற பட்டம் பெற்ற இவர், திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தினரால் 1951ஆம் ஆண்டு 'முதுபெரும் புலவர் என்ற பட்டம் வழங்கப் பெற்றார். பல்வேறு நூல்களை இயற்றியும் வடமொழி நூல்களைத் தமிழிற் பெயர்த்தும் பல்லாற்றானும் நந்தமிழிற்கு நனி மிகத் தொண்டாற்றிய இவர் தமது 73வது வயதில் 21-10-1953இல் சிவனடிப் பேற்றினை அடைந்தார். நூலாசிரியர் பற்றிய வரலாறு கவியரசர் முடியரசனார் தமிழ்கூறு நல்லுலகு நன்கறிந்த தலைமைக் கவிஞராவர். தமிழ்மொழியை ஐயந்திரிபற எழுத்தெண்ணிக கற்று, நற்றமிழாசிரியராய் அமைந்து, அற்புதப் பாக்களை அருந்தமிழில் இசைக்கும் ஆற்றல் பெற்றவர், நாவீறு வாய்க்கப்பெற்ற பாவலாாய்த் நிகழபவர். இவரைக் குறித்து டாக்டர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) அவர்கள் குறிப்பிடும் மகப்புரை பின்வருமாறு: பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட' எண்ணும் இம் முடியரசர் நமக்குத் தொழில் கவிதை, நற்றமிழுக்கு ஆக்கம் தேடுதல்' என வாழ்ந்து வருபவர்; தமிழ் நலம் கருதித் தன்னலம் விடுவித்தவர்; சிந்து பாடும் சிற்றாறு போலும் செந்தமிழ் நடை வல்லவர்; தமிழ்த் தாய்க்கு வாய்த்த மறந்தும் புறந்தொழாத ஆழ்வார்