பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w).t mrr. & 座 அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் அடுத்த நாளில் அவனுடைய ஊரைக் கேட்டேன் என்னும் திரைப்பாடல், முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன்நாமங் கெட்டாள் தலைப்பட்டால் நங்கை தலைவன் தாளே. -ஆறாம் திருமுறை; திருவாரூர்த் தருத்தாண்டகம் எனும் திருநாவுக்கரசர் பெருமான் வாக்கின் மறுகுரலாக ஒலிக்கின்றது. தமிழினத்தின் தொன்மை குறித்துப் பேசு வோர், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி என்ற புறப்பொருள் வெண்பாமாலை அடிகளைக் குறிப் பிடுவர். இதனை மறவாது கண்ணதாசன், கல்தோன்றி மண்தோன்றுமுன் தோன்று தமிழே கவிமழையில் ஆடிவரும் கன்னி இளமயிலே என்று தமிழ், முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்ப் பெயர்ந்தொளிரும் பெற்றியினைப் புலப்படுத்தியுள்ளார். @・@r.ー2