பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 இலக்கிய ஏந்தல்கள் 1949ஆம் ஆண்டில் இவர் கலைச்செல்வி என்னும் நங்கை நல்லாரைத் திருமணம் செய்து கொண்டார். தமிழ்த் தென்றல் திரு. வி. க., கவிஞர் வாணிதாசன் முதலிய அறிஞர் பெருமக்களுடன் நெருங்கிப் பழகினார். அதுபோது நாடடில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தம் துணைவியாரோடு கலந்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர்ச் சென்னை யிலிருந்து காரைக்குடி சென்று அங்கு மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியினையேற்று, அப்பணி யினைத் தொடர்ந்து 28 ஆண்டுகள் செய்து ஓய்வு பெற்றார். இவருக்கு ஆண் மக்கள் மூவரும் பெண் மக்கள் மூவரும் மக்கட் செல்வங்களாக வாய்த்துள்ளனர், 1955ஆம் ஆண்டு குருதி உமிழும் கொடுநோயாம் காச நோய்க்கு ஆளாகி, புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணி யனார். வி.கே. இராமச்சந்திரனார் முதலிய புகழ்வாய்ந்த, தமிழ் உள்ளம் வாய்ந்த மருத்துவர்களால் புது வாழ்வு. தரப்பெற்றார். இளமைக் காலத்தில் முருகனைப் பாடுவதே தம் கவிதையின் பயன் என்று தம் கவியுலக வாழ்க்கையைத் தொடங்கிய கவிஞர் 1940ஆம் ஆண்டிற்குப் பிறகு, சமுதாயச் சூழல், தமிழ்நாடு, தமிழ்மொழி இவை குறித்தே பாடி வருகிறார். தமிழகத்தில் அமைந்திருந்த சமுதாயச் சூழலின் தாக்கமும், சுய மரியாதை இயக் கத்தின் பால் இவர் கொண்டிருந்த வேட்கையும். பாவேந்தர் பாரதிதாசனார் பால் இவர் கொண்டிருந்து. பற்றும் இவரை ஆத்திக நிலையிலிருந்து மாற்றி நாத்திக ராக்கி, அதற்கேற்பவே கவிதைகளைப் புனைய வைத்தன கலப்பு மணத்தைத் தம் பாடல்களில் பெரிதும் வற்புறுத்திய இவர் சொல்லிய வண்ணம் செய்து காட்டிய