பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3. tary. 2 1 Ꮮ ' செம்மலாகத் துலங்குகிறார். தாம் கலப்பு மணம்செய்து கொண்டதோடு, தம் மக்களுக்கும் கலப்பு மணம் செய்து வைத்த சீர்திருத்தம் இவர் வாழ்விற் பலரும் கண்டுவியந்த வொன்றாகும். இவர்தம் இயல்பிற் சிறத்தனவாகக் கவிஞர் ஆ. பழநி அவர்கள் குறிப்பிடுவன பின்வருமாறு : சாதி சமயங்களுக்குள் ஆட்படாமை-நன்றி மறவாமை-நட்பைப் பேணல்-கொள்கைப் பிடிப்பு. குறிக்கோள் வாழ்வு-உதவும் உள்ளம்-ஒட்டார் பின் செல்லாமை-ஆசிரியர்ப் போற்றல்.ஆகியன இவர் தம் இயல்பிற் சில. "சங்கப் புலவர்தம் பாடலே பாடல் என்பதில் அழுத்தமான நம்பிக்கையுடைய இவர் பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனாரைத் தந்தையாகவும் கருதிக் "குலமுறை கிளத்தும்" கொள்கையுடையராக விளங்குகிறார். 'பெரும்பாலும் தன்னை மறந்த லயம் தன்னில் இருக்கும் இயல்பினர்; "புட்டி' களின் துணையால் அன்று; எட்டியவரை சிந்திக்கும் இயல் பினால். கனவிலும் கவிதை பாடுவது என்பது இவருக்கே உள்ள தனித்திறனாகும். கனவிற் பாடிய கவிதையை மறுநாள் காலையில் எழுந்து வரி மாறாமல் எழுதிவிடும் இவரது ஆற்றல் வியப்புக் குரியது. இஃது இயற்கை வழங்கிய அருட்கொடை என்றே கூறல் வேண்டும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் அழகின் சிரிப்பு கவிதை அனைவரும் அறிந்தது, இவரும் 1950 ஆம்ஆண்டு