உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. கா. Ꮭ lᏭ இலக்கியச் சுவை தேரும் நெஞ்சப் பாங்கினையும், நூல் இயற்றும் ஆற்றலையும், அவர்தம் நுண்மாண் நுழைபுலச் சிறப்பினையும், தமிழ்த் தொண்டினையும், சன்மார்க்க சபை கண்ட திறலினையும் திறம்பட விளக்கி நிற்கின்றது எனலாம். நூல் அமைப்பு இந்நூல் கதிரெழு காதை தொடங்கி, சிலைகாண் காதை வரை பதினேழு காதைகளை: உள்ளடக்கியதாகத் திகழ்கின்றது. நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, நாற்சீர் விருத்தம், அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர்விருத்தம் கலிவெண்பா, கட்டளைக் கலித்துறைமுதலிய பாவும் பா வகைகளும் பெற்று மொத்தம் இக்காப்பியத்தில் 20 22 செய்யுட்கள் அமைந்துள்ளன. நூற்பெயர் காரணம் பண்டிதமணி கையகத்தே எப்பொழுதும் விளங்கி, அன்னாரது இயக்கத்திற்குத் துணை நின்ற அரிய ஊன்று கோலினையே காப்பியப் பெயராகக் கொண்டமை இதற் கொரு தனிச்சிறப்பாகும், ஊன்றுகோல் உதவுவதாவது தளர்ந்துழி அதனை நீக்குதல் எனப் பரிமேலழகர் விளக்குவார். தமிழுக்குத் தளர்வு வராது எழுத்து, பேச்சுச் செம்மைகளை வற்புறுத்தி அம்மொழி வளர்ச்சிக்கு ஒர் ஊன்றுகோலென விளங்கியமையாலும், எப்பொழுதும் செவ்விய பேரரசின் வையகத்தே விளங்கி அவர்தம் நடுவு நிலை, நல்லாட்சிகளை விளக்கிநின்ற செங்கோல் போலக் கதிரேசர் கையில் விளங்கியமையாலும் இக் காப்பியம் அச்சொல்லாட்சியில் அக்கறை காட்டிப் பலவிடத்தும் நன்கு புனைகின்றது. - இ. ஏ.-14