பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

é 14 இலக்கிய ஏந்தல்கள் கவிஞரின் கருத்துப்படி கதிரேசற்கு ஏற்பட்டது காற்குறையேயாகும் (1 :22). கதிரேசர் கையகத்தே கண்ட ஊன்றுகோல் கதிர்காமத்துக் கடவுள் கதிரேசன் கையில் தண்டுகொண்டு (தண்டாயுதம்) நிற்பது போல இருந்ததைப் பகுத்தறிவு நெறிப்பட்ட பண்பாளராம் முடியரசர் சொல்லாமற் சொல்கின்றார் ஊன்றுகோல் ஒன்று பற்றி உரத்துடன் நிமிர்ந்து நின்றான் சான்றவர் போற்று மாறு தண்டுகொண் டங்கு கின்றான் (2:18) இளம்பிள்ளை வாதத்தால் பண்டிதமணியாரின் நவையுறு கால்கள் எங்கும் நடந்திட இயவில்லை" என்றாலும் அன்னாரின் குவிதரும் புகழோயாண்டும் குலவிட நடந்த தங்கே என்கிறார் கவிஞர். (2 : 25) இவ்வாறு டாக்டர் தமிழண்ணல் அவர்கள் தம் "தமிழ்க்கதிர் உரையில் விளம்புவர். நூல் நுவலும் செய்திகள் 1. கதிரெழுகாதை முதலாவது கதிரெழு காதை" இக்காதையில் பண்டிதமணி கதிரேசனாரின் பிறப்புப் பற்றிய செய்தி களைக் காணலாம். 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாட் டெழுந்தது பூங்குன்றமாகும். சங்ககாலப் பூங்குன்றமே இன்றைய மகிபாலன் பட்டி என்பர். இதனைக் கவியரசு முடியரசனார் கிளத்தும் பாங்கு உள்ளத்தை நெகிழ்விப்ப தாகும்.