பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à.am. 3 ( , யாதும் ஊரே யாகும் யாவருங் கேளிர் என்னும் கோதிலாக் கொள்கை முற்றுங் குறித்திடும் பாடலொன்றை ஒதுவார் உள்ள மெல்லாம் உவந்துவங் தேத்தும் வண்ணம் ஒதினான் கணியன் என்னும் ஒப்பிலாச் சங்கச் சான்றோன் (2) விளிமணக்கொள்கை யெல்லாம் விளித்திடுஞ் சங்கப் பாட்டுக் குரியவன் கணியன் என்னும் ஒருதனிப் புலவ னான குரிசிலை உலகம் போற்றக் கொடுத்தது தமிழ்ப்பூங் குன்றம் சிறியதே எனினும் மிக்க சிறப்பினாற் பெரிய தாகும் (3) மகிபாலன் பட்டியில் முத்துக் கருப்பன்-சிவப்பியார் வெற்ற ஆண் மகனே நம் கதிரேசர். விசு பிரட்டாசித் திங்கள் வெள்ளியாம் இரண்டாம் நாளில் பசுபதிக்குரிய தென்று பகரும் ஆதிரை நன்னாளில் கதிரேசர் தோன்றி னார். கதிரொளி தரும் பிள்ளைக்குக் கதிரேசன் என்னும் பேரிடப்பட்டது. மூன்று வயது நடக்கும்போது இவருக்கு இளம்பிள்ளைவாதம் என்னும் நோய் வந்தது. இதனாற் பெற்றோர் பெரிதும் கவன்றனர். 2. கலைபயில் காதை திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பே அந்நாளைய படிப்பு. எண்ணையும் எழுத்தையும் மண்ணிலும் ஒலைச்