பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3. tasy. 217 பொருள்கயம் தெரிய லானார் புகழும்நாள் வரைய லானார் வருமிவை திங்கள் ஏழில் எவ்வணம் வாய்த்த தம்மா! (8) இவ்வாறு தொடக்கக் கல்வி பயின்ற கதிரேசனாரைச் செட்டிநாட்டு வணிகர் மரபுப்படி இலங்கையில் அமைந் திருந்த கடைக்குக் கணக்கெழுதவும், வணிகத்தைக் கற்றுக் கொள்ளவும் இவரின் தந்தை அனுப்பிவைத்தார். துணிக் கடையில் துணியளந்து கொடுத்து விற்கும் வாணிகத்தினை மேற்கொண்டார் கதிரேசர்; மூன்றாண்டுகள் இவ்வாறு கழிந்தன. தந்தை மறைந்தார் என்னும் செய்தி கேட்டுத் தாய்நாடு விரைந்தார்; மீண்டும் இவருக்குப் பக்கவாத நோய் பற்றிக்கொண்டது. இதனால் வற்றிய கால் வந்து வாய்த்தது. ஊன்றுகோல் ஒன்று கொண்டு நடந்தார். கம்ப ராமாயணத்தைத் தாமே படித்துத் தேர்ந்தார். அரசஞ் சண்முகனாரிடம் தொல்காப்பியம் கற்றார். தருவை நாராயண சாத்திரியாரிடம் ஐந்தாண்டுகள் வடமொழி கற்றார். இப்பெற்றியினைப் பின்வருமாறு உரைப்பர் கவியரசு முடியரசனார்: அறிவினை வளர்க்க வேண்டி அயன்மொழி ஒன்றைக் கற்றார் செறிதரும் அறிவைக் கொண்டு செந்தமிழ் பேணி நின்றார் கெறிதடு மாற வில்லை நெடும்புகழ்த் தமிழை என்றும் குறைபடப் பேச வில்லை குலக்கதி ரேசர் மாதோ (39)