பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 இலக்கிய ஏந்தல்கள் 3. சபை காண் காதை பண்டிதமணி கதிரேசனார் அவர்களின் தலையாய தொண்டு மேலைச் சிவபுரியில் சன்மார்க்க சபை நிறுவிய தாகும். வளமாக வாழ்ந்து வரையாது கொடுத்து வாழும் குடும்பம் வ. பழ. சா பழநியப்பர் குடும்பமாகும். அவர் தம்பி அண்ணாமலையார், தம் அண்ணாவின் பண்புகளுக் கேற்ற தம்பி. சைவித்தையும் செந்தமிழையும் சிறக்க ஒம்பிய குடும்பத்தினரான இவர்கள் மேலைச் சிவபுரியில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியும், செந்தமிழ் நிலையமும், சன்மார்க்கச் சபையும் பண்டித மணியின் துரண்டுதலாலே கண்டார்கள். சன்மார்க்க சபையில், அதன் ஆண்டு விழாக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத தமிழறிஞர்கள் இலர். 4. மணம்புணர் காதை கதிரேசனாரின் கால் ஊனமும், நிதி நிலைமை சரியில்லாத நிலையும் அவருக்குத் திருமணப் பேறு முப்பது வயது கடந்தும் வாய்க்காமல் தள்ளிப் போட்டு வந்தன. பதின்மூன்று வயதிற்குள் திருமணத்தை நடத்திவிடும் தனவணிகர் மரபில் கதிரேசனார்க்கு முப்பது வயது கடந்தும் திருமணமாகாத நிலைகண்டு கதிரேசனைப் பெற்ற தாய் மனம் வருந்தினார். பழநியப்பர் முன்வந்து ஈப்போக் கடையில் கதிரேசருக்குப் பங்கு தருவதாகச் சொல்லி அவர் பொருள் நிலையை வளப்படுத்தி, அவர் உறவில் மீனாட்சி என்னும் நங்கையைக் கைப்பிடிக்குமாறு செய்தார். கதிரேசனார்க்கு வாய்த்த மனைவி அரும் பண்புகள் வாய்ந்தவர். "கண்ணகியைக் கண்ணெதிரே கண்டதில்லை