பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 இலக்கிய ஏந்தல்கள் வான்கலந்த மாணிக்க வாச கர்தாம் வாய்மலர்ந்து பொழிந்ததிரு வாசகத்தைத் தாங்கலந்து பாடுங்காற் செங்கரும்பின் செழுஞ்சாறு வடித்தெடுத்துக் குறிஞ்சி தந்த தேன்கலந்து பால்கலந்து முற்றி நின்ற தீங்கனியின் சுவைகலந்து பிறந்து வந்த ஊன்கலந்தும் உயிர்கலந்தும் பருகுங் காலை உவட்டாமல் இனிப்பதுபோல் இன்பங் காண்பார் (12) 6. மயக்குருக் காதை "காற்றும் வெளிச்சமும் கலந்து விரவும் கீற்றுக் கொட்டகைக் கீழமர்ந்திருந்து பயிலுதல் எழுதுதல்’ பண்டித மணியின் வழக்கமாகும். ஒருநாள், தம்மேனியில் திருநீறு துதையப்பூசி, உருத்திராக்க வடம் கழுத்தில் சுற்றி, பருத்துயர் மேனியர் ஒருவர் பக்தர் எனும் வேடம் பூண்டு முருகா முருகா" என்று உருகும் வாயராய்ப் பண்டித மணியிடம் வந்தார். பணம் பெறத் திட்ட மிட்டுத் தணிகை முருகன் ஆணைவழியே தாம் அவரிடம் வந்ததாக அறிவித்தார். முருகனுக்கு ஆலயம் எடுக்க அவாவுற்றதாக அறைந்தனர். ஐயாயிரம் ரூபாய் இரந்து நின்றனர். இதுகேட்ட கதிரேசரோ அப்போலித் துறவிக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணினார். எத்தனையோ முருக அடியார்கள் இருக்க, அவரிடம் மட்டும் ஆண்டவன் கொண்ட கருணையை நினைத்து உருகுவதாகச் சொன்னார். பின், உங்கள் கனவில் வந்த முருகன் எளி யேன் கனவிலும் வாராதிருப்பானோ என்று கூறி இன்று இரவுக் கனவில் அவன் வந்து கட்டளையிட்ட பிறகு மறு நாள் விடியலில் ஆவன செய்வதாக மறுமொழி பகர்ந்தார்