பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. Carr. 221 மறுநாள் அப்போலித் துறவியிடம் கதிரேசர், 'ஐயா! முருகன் என் கனவில் நேற்றிரவு வந்தான். என்னிடம் பணமில்லை என்பதை அவன் அறிவான். ஆதலின் பணம் இருக்குமிடத்தையும் சொல்லிவிட்டுச் சென்றான். அவ் விடத்தைத் தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கும்" என்று சொல்லி நின்றார். உடனே போலித் துறவி அவ்வாறு தோண்டும் குழியில் புதையல் கிடைக் காது போய்விடின் என்ன செய்வது என இயம்பினான். உடனே பண்டிதமணியவர்கள், 'அந்தக் குழியில் புதையல் கிடைக்கவில்லையெனில் அறுமுகனுக்கு ஆலயம் கட்ட வேண்டுமென்று அரும் பொருள் கேட்டு வந்த அடியாரையே அச்சமாதிக் குழியில் இறக்கினால் அவர் சீவன் முக்தராகி விடுவார், அதன் மேல் ஒரு கோவில் கட்டி நினது கையால் நித்திய பூசனையும், நீயே ஆற்றி வருக எனப் பணித்தனன். எனவே நீங்களும் அறுமுக வொருவன் என் கனவினில் இட்ட கட்டளையை நிறை வேற்றுவதற்குத் தாமதிக்காது உதவுதல் வேண்டும்; எனவே மாலைப்பொழுது வந்தருள்க" என்று வேண்டி நின்றார். இதனைக் கேட்டவுடனே போலிச்சாமி எழுந்து நடந்தார். "மாலை வந்தது; மாதவர் வந்திலர். கந்தன் பெயரால் கயிறு திரித்தவர் அந்தர்த் தியானம் ஆகினர்." 7 வழக்காடு காதை வீரகவி என்கார் செட்டிநாட்டில் அந்நாளில் வாழ்ந்த மிடுக்கான கவியாவார். அவர் தன்னைப் போலக்கவிஞர் நாட்டில் எங்குத் தேடினும் கிடைக்கப் பெறார் எனக் கூறித் தருக்கி நின்றார். அவர் செருக்கைப் பண்டித மணியார் தக்க வகையில் தம் தமிழ்ப் புலமை காட்டி அடக்கினார். தம் வருவாய் பண்டிதமணியால் குறைந்தது எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.