உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6A mm. 223 பழையதமிழ் நூலெனினும் சமயம் பற்றிப் பகர்கின்ற நூலெனினும் எதுவென்றாலும் பிழையுறவுங் தெளிவுறவும் அவையோர் உள்ளம் பீடுறவும் பதிவுறவும் தேர்ந்த சொல்லின் மழைபொழிவார்; நெடுநேரம் நனைந்தி ருப்போர் மனத்தகத்துச் சலிப்பொன்றும் தோன்றா வண்ணம் நுழைபுலத்தால் நகைச்சுவையும் குழைத்தெ டுத்து நுவன்றிடுவார்; அஃதில்லாப் பேச்சே யில்லை (27) 9 நட்பு வளர் காதை இலக்கணக் கடலைக் கரை கண்டவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார் ஆவர். திருக்குறளுக்கு விருத்தியுரை கண்டவரும் அவர். அத்தகு நல்லாரோடு இவர் நட்புப் பூண்டார். இவர்கள் இருவரிடையேயும் நட்பு மலர்ந்ததே ஒரீ அரிய நிகழ்ச்சியாகும். ஒருநாள் மருத்துவமனை யொன்றிற்குப் பண்டிதமணியார் மருத்துவரை நாடிச் சென்றிருந்தார். அப்போது மருத்துவர் வெளியே சென் றிருந்தார். பொலிவற்ற குடுமியும் சட்டையணியா உடம்பும் கொண்டு வாடிய மேனியராயிருந்த ஒருவரை அங்குப் பார்த்து, அவர் மருத்துவமனையின் ஏவலாளாக இருப்பர் எனப் பண்டிதமணியார் கருதிக் குடிநீர் கொஞ்சம் கொணர்க' என்றனர். அவரும் கொண்டு வந்து தந்தார். பின்னர்ப் பண்டிதமணிக்குப் பசி வந்துற்றது. மீண்டும் ஏவலராகத் தெரிந்தவரைப் பார்த்து 'உண்டி வாங்கித் தரலும் ஒல்லுமோ? எனக் கேட்டார். அவரும் உடன் வாங்கிவந்து தந்தார். இந் நோம் மருத்து வரும் வந்தார். பொருத்தம் பொருத்தம் புலவர் தொடர்பு. இருவரையும் யான் அறிமுகம் செய்ய எண்ணினோம். இவரே சோழ வந்தான் அரசஞ் சண்முகனார் என்றனர் மருத்துவர். பணியுமாம் என்றும்