பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 இலக்கிய ஏந்தல்கள் பெருமை என்னும் திருக்கு றள்வாக்கிற்கு ஒள்ளிய உருவாக இருந்த பண்டிதமணி அரசஞ்சண்முகனாரைக் கண்டு, அவர் நட்பைப் பெற்று மகிழ்ந்தார், எளிமைக்கோர் இலக்கியமாய் மக்கள் தொண்டிற் கோர் இலக்கணமாய்க் குன்றக்குடியில் வாழும் தமிழ்த் துறவி குன்றக்குடி அடிகளாரோடு நேயம் பூண்டார்; திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளோடு தொடர் கொண்டார்; தமிழ்த்தென்றல் திரு வி.க. பண்டிதமணி யாரின் உற்ற நண்பரானார்; பண்டிதமணி, தனித் தமிழ் இயக்கங்கண்ட மறைமலையடிகளாரைத் தழுவிக் கொண் டார்; யாழ் நூல் தந்த இலங்கைத் துறவியார் விபுலானந் தரின் அரிய நட்புச் செல்வத்தை நயந்து பெற்றார்; தொல்காப்பியக் கடல் கந்தசாமியார் இவர்தம் உற்ற தோழரானார்; உரை வகுப்பதில் புலமை சிறந்த நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டாரின் தொடர்பு கிடைத்தது. நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, சேது சமத்தானப் பு ல வ ர் ரா, ராகவையங்கார், தாகூர் சட்ட விரிவுரையாளர் அறிஞர் கா.சு பிள்ளை, இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் முதலியோர் இவர்தம் நண்பர்களானார்கள். 10 பேராசிரியக் காதை திருவேட்களம் என்னும் பதியையடுத்து அண்ணா மலை அரசர் கண்ட கல்விக் கழகமாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இ வ ர் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழாசிரியர் பணியாற்றினார். டாக்டர் அ. சிதம்பரநாதர், இலங்கை இலக்குமண ஐயர், டாக்டர் வ.சுப.மாணிக்கனார்முதலானோர் இவர்தம் தலைமாணாக்