§3. Carr. 225 கரிகளாவர். இவர் பேராசிரியராக வீற்றிருந்த சிறப்பு, ஆங்கிலங் காற்றோர் தாமே அமர்வதற் குரிய ரென்ற பாங்கினில் ஒழுகும் நாட்டில் பைந்தமிழ் தேர்ந்த செம்மல் ஓங்குபே ராசா னாகி உயர்பெரும் பொறுப்பைத் தாங்கி ஈங்கினி தாட்சி செய்தார் இணையிலை எனும் மாறே என்னும் பாடலால் துலக்கமுறும். 11 பொதுப்பணிபுரி காதை இசைத்தமிழ் வளர்ச்சிக்கும் பண்டிதமணி அளப்பரிய பணி ஆற்றினார்; அண்ணாமலைநகரில் மணிவாசக மன்றம் கண்டு வியாழன் தோறும் பாட்டின் நலம் பரிந் துரைக்கும் பணி மேற்கொண்டார். கொப்பனாபட்டியில் மெய்யப்பர் உதவியால் கலைமகள் கல்லூரி கண்டார். மகிபாலன் பட்டிக்கு நல்ல சாலை வசதி கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார். அஞ்சலகம் ஒன்று செயலாற்ற ஆக்கம் தேடினார். பேருந்து வசதிகள் அச்சிற்றுார்க்குக் கிடைக்க வழி வகுத்தார். 12 விருதுபெறு காதை கதிரேசனாருக்கு மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை யினர் 'கண்டிதமணி என்னும் பட்டம் தந்து பாராட்டினர். சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் 'முதுபெரும் புலவர்' என்னும் பட்டம் இவருக்கு வழங்கப் பட்டது. திருவண்ணாமலைத் திருமடம் சைவ சித்தாந்த
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/225
Appearance