326 இலக்கிய ஏந்தல்கள் வித்தகர்' என்னும் பட்டத்தை அவர் தகுதியறிந்து தந்தது. ஆங்கில அரசாங்கம் 'இராவ் சாகிப் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்க எண்ணியது. அதனை வாங்க மறுத்த பெருமித உள்ளம் கதிரேசனாருடைய தாகும். கல்வித்துறையில் வல்லவர் தமக்கு வழங்கப்படும் 'மகாமகோபாத்தியாய என்னும் விருது அண்ணாமலை அரசரின் அரிய முயற்சியாலும் அவர் மகனார் முத்தைய வேள் அவர்களின் முயற்சியாலும் கிடைத்தது, விருதுகள் இவர்க்கு மேன்மைகள் தந்தன. இவரால் விருதுகள் ஏற்றமும் பெற்றன, தான் சிறிதாயினும் தக்கார் கைப்படுமேல் வான்சிறி தாக வளர்ந்திடும் அன்றோ. +. 13 நூல் தரு காதை "மிருச்சகடிகம்' என்னும் வடமொழி நூலினை அழகுத் தமிழில் மண்ணியல் சிறுதேர்’ என இவர் மொழி பெயர்த்தனர். சுக்கிரநீதி, சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம் முதலான நூல்களையும் யாத்தார். திருவாசகக் கதிர்மணி விளக்கம் என்னும் இவர் நூல், இவர்தம் நுண்மாண் நுழைபுலம் காட்டும். 14 மணிவிழாக் காதை மகிபாலன்பட்டி அணிசெய்யப் பெற்றது மாவிலைத் தோர ணங்கள் வயங்குறக் கட்டு வித்தார் பூவினிற் சரங்கள் கட்டிப் புதுமணம் பரவவிட்டார்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/226
Appearance