பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 227 வாவியிற் பூத்து நிற்கும் மலர்களும் கொணர்ந்து வைத்தார்; காவெனக் குளிர்ந்து தோன்றக் - கடிங்கர் கோலஞ் செய்தார் (3) அண்ணாமலை அரசரின் தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் படைத்த மணிவிழா மலர் வெளியிடப் பெற்றது. அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். நாவலர் சோமசுந்தர பாரதியார், கரந்தை நீ. கந்தசாமிப் பிள்ளை முதலான தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டு பண்டிதமணியின் மணிவிழாவினை மாண்புற நடாத்தினர். 15 பிணியுறு காதை பண்டிதமணியார் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த நிலையினை முடியரசனார் கிளத்தும் போக்கும் நம் நெஞ்சை நெகிழ்விப்பதாயுளது. பாட்டுக்குள் கயமுரைத்து மகிழ வைத்த பண்பட்ட செங்காவில், தமிழ்மு ழக்கம் கேட்பிக்கும் மணிகாவில், புலம்பல் ஓசை கேட்டதனால் மனமுருகிக் கண்ணிர் சிக்தி நாட்டுங்கற் சிலையானோம் சிறிது நேரம் நாவசைய விலைஎமக்குப் பின்னர்த் தேறி ஏட்டுக்குள் ளடங்காத துயரம் மாற இயன்றவரை முருகப்பர்.எடுத்து ரைத்தார் (7) குன்றக்குடி அடிகளார் பண்டிதமணியாரை வந்து பார்த்து ஆறுதல் கூறிப் போந்தார். 16 கதிர்மறை காதை பண்டிதமணியின் இறுதி வந்தற்றது. தரையில் பாய் விரித்துப் படுத்தவர் விழித்திலர். 'விரித்துரை நல்குவோர்