228 இலக்கிய ஏந்தல்கள் விரித்திலர் ஒரு சொல் என்றாடி, கதிரவன் மறையப் பின் யாண்டும் அழுகுரல் எழுந்தது. சிந்தித்துச் சிந்தித்து வாழ்நா ளெல்லாம் செயலாற்றி வந்ததமிழ் பெரியார் எங்கே? சிந்தித்துக் கண்டவற்றை நிரல்படுத்துச் செவிகுளிரத் தந்தபேரறிஞர் எங்கே? புந்திக்குள் இருளகற்றி ஒளியும் நல்கிப் பொலிந்திருந்த கதிரெங்கே? எங்கே? என்று சந்தித்த புலவரெலாம் கண்ணிர் சிந்தித் தாளாத துயரத்தில் மூழ்கி நின்றார் (3) 17 சிலைகாண் காதை கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பண்டிதமணி யாரின் சிலையைப் பாங்குடனே திறந்து வைத்து அவர்தம் விரிவான தமிழ்த் தொண்டினை விளங்கப்பாராட்டினார். பண்படும் ஒழுக்கம் மிக்கோர் பகர்தரும் வாய்ச்சொல் யாவும் ஒண்டமிழ் மாந்தர்க் கென்றும் ஊன்றுகோ லாகுங் கண்டீர் பண்டித மணியார் தந்த பயன்தரும் ஊன்று கோலைக் கொண்டுளங் தளரா வண்ணம் கூடியே நடப்போர் வாரீர்! (17) காப்பிய நலன்கள் பண்டிதமணி மகாமகோபாத்தியாய மு. கதிரே சனாரின் வாழ்க்கை வரலாற்றினைக் கவியரசு முடியரசனார் காப்பியமாகப் புனைந்துள்ளார். பதினேழு
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/228
Appearance