பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Meurs. 229 காதைகளும் 2022 பாடல்களும் கொண்ட இக்காப்பியம், அமைந்திருக்க வேண்டிய பல்வேறு நலங்களும் வீறுடன் பெற்று விளங்கக் காணலாம். 'பெருங்காப்பியப் பண்புகள் பல நிறைந்த சிறுகாப் பியம் இது. கதிரெழு காதை முதலாகச்சிலைகாண் காதை ஈறாகப் பதினேழு காதைகளையுடையது. அறுசீர், எழுசீர், எண்சீர் விருத்தங்களையும், கட்டளைக் கலித்துறை, கொசிசகக் கலியினையும் கொண்டு, இடையிடையிருந்த நிலை மண்டில நேரிசையாசிரியங்களுடன் யாக்கப் பெற்றது" என்று டாக்டர் தமிழண்ணல் இந்நூலினைப் பாராட்டுவர். மேலும் அவர் "வாழ்க்கை வரலாற்றைப் புனைவுமிகுதியின்றி அவ்வாறே காப்பியமாக எழுத முடியும் என்பதற்கு இஃது ஒரு தக்கசான்றாகத் திகழ் றெது. செம்பாதிக்கு மேல் படித்துக் கொண்டே செல்லும் பொழுது, உரைநடை வரலாறொன்றுக்குக் கொடுக்கப் பட்ட செய்யுள் வடிவமோ என்ற நினைவு எழுகிறது. எனினும் நடையோட்டமும் கருத்துச் செறிவும் தடை படாக் குருதியோட்டம்போல் காப்பியத்தை உயிர்ப் புடையதாக்குகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார். காப்பியத்தின் தலைப்புப் பொருந்தும் கண்டிதமணியவர்கள் இளமையிலேயே பக்கவாத நோய்க்கு ஆளானார்கள். அதனால் கால்கள் விளக்க மில்லாமற் போயின. உடலுறுப்புகளில் ஒன்று ஒருவர்க்குக் குறைபட்டிருக்குமானால் மூளையாற்றல் மிகுதியாக இருக்கும் என்பர். அந்த முறையில் இவர் அறிஞர்போற்ற நடைகொண்டு வாழ்ந்தார். நடக்கும் நடைகுறைந்தாலும் ஒழுகும் நடையும், எழுதும் நடையும் சீரியதாகவே இலங்கின. இதனைக் காப்பிய ஆசிரியர், இ.ஏ.-15