பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 இலக்கிய ஏந்தல்கள் புழுங்குதல் அரிசிக் கன்றிப் புத்தியில் அதனைக் கொள்ளார் பழகுதற் கினியர் அந்தப் பகுதியில் வாழும் மாந்தர் (1:13) குலவுவார் நடந்து செல்லக் குறுவழி கொண்ட தேனும் உலகுளார் நடந்து செல்ல உயர்வழி பலவுஞ் சொல்லி அலகிலாப் பெருமை பூண்ட அரும்பெரும் பாடல் தந்து நிலமெலாம் புகழ்வி ரித்து நிலவுவ தவ்வூர் ஆகும் (1:14) கண்டிதமணி தமக்குத் தாமே படித்துக் கற்றவரான சிறப்புப் பின்வருமாறு நயம்படக் கிளத்தப்படுகின்றது. இனியகல் லார்வம் மிஞ்ச இனுஞ்சில தேடிப் பெற்றான் கனிவுடன் விளக்கிக் கூறிக் கற்பிக்கும் ஆசானின்றித் தனிமையில் அனைத்தும் கற்றுத் தக்கதோர் புலமை பெற்றான் தனிமொழி தமிழே யன்றோ தனித்திருந் ததனைக் கற்றான் (2:23) இது போன்றே பண்டிதமணியின் கால்கள் எங்கும் நடக்காமல், அவர் ஈட்டிய புகழ் எங்கும் பெருமிதத்துடன் நடை பயின்றதைப் பின் வருமாறு நயம்பட முடியரசனார் விவரிக்கின்றார்.