பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 இலக்கிய எங்கல்கள் புலமும், தடைபடாப் பாட்டோட்டமும் தெற்றெனப் புலனாகின்றன. சான்றுகள் வருமாறு: கடையிரவு கழிந்தபின்னர் விழிம லர்ந்து கனிவுதரும் வாசகத்தை விரித்து நெஞ்சில் இடையறவு படாவகையில் ஒதிஓதி o இறைவனடி நினைந்துருகி மகிழ்ந்து பின்னர் மடலெழுதும் மெய்யன்பர் மகிழு மாறு - மறவாமல் அவ்வவர்க்கும் ஏற்ற பாங்கில் விடையெழுதும் இயல்பதனைக் கடமையாக விடையுடையன் அடிபரவும் தொழும்பர் கொண்டார் (5:10) ஒருபாதி உமையவட்குத் தனது மெய்யில் இடமளித்த ஒருவனடி உளத்திற் கொண்டார் ஒருபாதி தமதுளத்திற் செந்த மிழுக்கும் ஒருபாதி சிவநெறிக்கும் இடம ளித்தார் இருவேறு மொழியுணர்ந்தும் உளத்திற் றோய்ந்த இனியதமிழ் மொழியாலே தொழுது வந்தார்; திருவாத ஆரர்மொழி மூவர் ஒதும் திருமொழிகள் இவர்நெஞ்சை யுருக்கி நிற்கும் (5:11) செட்டி நாட்டுப் பெருமக்கள் பண்பாடு காப்பியத் தலைவர் தன வணிகர் குலப் பெருமனார் ஆனதனால் இக்காப்பியத்தில் செட்டிநாட்டுப் பழக்க வழக்கங்கள் திறம்படக் கிளத்தப் படுகின்றன. மேலும் காப்பிய ஆசிரியரும் செட்டிநாட்டில் நெடுங்காலம் வாழ்ந்து வருபவரான காரணத்தினால் செட்டிநாட்டு மக்களின் பரந்துபட்ட பண்பாட்டினை மிகவும் நுணுகிக்