பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இலக்கிய ஏந்தல்கள் பட்டுக்கோட்டையாரின் மேற் காணும் பாடலில் உழைப் பாளரின் உள்ளக் குரல் புத்துலகிற்கேற்ப இசைக்கின்றது. இறைவா! நீ இருட்டைப் படைத்தாய் -நாங்கள் விளக்கை யுருவாக்கிக் கொண்டோம்; நீ மணலைப் படைத்தாய், நாங்கள் பளிங்கைப் படைத்துக் கொண்டோம். என்று இக்பால் பாடிய பாடலில் மனித மேன்மை பேசப் பட்டதுபோல் பட்டுக்கோட்டையார் பாடலிலும் சந்திர னைத் தொட்ட மனித சக்தி புகழப்பட்டுள்ளது வாழ்வின் உண்மைகளோடு தத்துவங் கலக்கும் பட்டுக்கோட்டையார் மனிதன் ஒவ்வொருவனுக்கும் சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம் என்று உருகப் பாடினார் உவமைக் கவிஞர் சுரதா இதே செய்தியைப் பாடும்பொழுது, ஆடியடங்கும் வாழ்க்கையடா ஆறடி கிலமே சொந்தமடா என்று நயமுறப்பாடி, பாடையைக் காலில்லாக் கட்டில்’ என்றும் மரபுணர்த்தி இசைத்தார். இற்றை நாட் கவிதையுலகம் உழைப்பவர் உயர்வு பாடினாலும், சமுதாய மாற்றங் குறித்துப் பாடினாலும், மறுமலர்ச்சி, மொழிப்பற்று. மனிதநேயம் ஆகிய எத்துறை பற்றிக் குரல் தந்தாலும் அக்குரல் வழியே நேரடியாகவோ மறைமுகமாகவோ புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் வகுத்த புதுமரபே தலையெடுத்துச் செம்மாந்து நின்று