பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ім.ным. 241 பருத்திருக்கும் கழியினைக்கை பிடித்திருக்கும் பளபளக்கும் அக்கழியில் பூணிருக்கும்: விரித்திருக்கும் நீள்விழிப்பில் அமர்ந்திருப்போர் விழிகளுக்குள் வியப்பிருக்கும் களிப்பிருக்கும் (8 : 6) பொன்விசிறி மடிப்பொன்று தோளின்மீது புரண்டிருக்கும், வடமொழியும் பயின்றா ரேனும் மின்முகிலிற் பொழியுங்கால் அயன்மொழிச் சொல் மேவாத தமிழிருக்கும்; பிறர் கருத்தை முன்னியல்பின் எள்ளலொடு மறுக்குங்காலை முனைமழுங்காக் கூர்ப்பிருக்கும் இனிதமர்த்து கன்மணியார் கிற்காது பேசுகின்ற நாவன்மை கண்டுலகம் போற்றி நிற்கும் (3:7) திருக்குறள் கருத்துகளைப் பெய்தல் தமிழ்நாடு செய்தவப் பயனாய்த் தோன்றியவர் திருவள்ளுவர். அவர் இயற்றியருளிய உலகப் பொதுமறை காலம், இடம், நாடு, மொழி, இனம் இவற்றையெல்லாம் கடந்து என்றும் வாழும் கீர்த்தி படைத்ததாயிருக்கின்றது. திருவள்ளுவருக்குப் பின்வந்த தமிழ்ப் புலவர் பெருமக்க ளெல்லாம் திருக்குறள் தொடர்களையும் திருக்குறட் கருத்துகளையும் தம் நூலிற்கையாண்டிருக்கக் காணலாம். மணிமேகலைக் காப்பியத்தைத் தந்த கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருளுறை தேறாய் (சிறைசெய்காதை 59-61) என்று திருக்குறளினையே அப்படியே அகழ்ந்து கையாண் டிருக்கக் காணலாம். -