பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 இலக்கிய ஏந்தல்கள் ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து (திருக்குறள் 398) என்பர் திருவள்ளுவர். இதனைக் காப்பிய ஆசிரியர் கவிஞர் முடியரசனார் பின்வருமாறு புகல்வர்: ஒருமையிற் கற்ற கல்வி உதவிடும் எழுமை என்ற மறைமொழி புகன்ற வாய்மை மறைமொழி யாகா தன்றோ? (1:9) சபை காண் காதையில் பின்வரும் பாடலில் மீண்டும் குறட்கருத்தைப் செய்துள்ளார் கவிஞர். கல்லறத்தை விலைகொடுத்து வாங்குவது நாகரிகச் செயலன்று, நாளும் ஓங்கும் பல்வளங்கள் பெற்றவர்தாம் ஊருணிபோல் பழமரம்போல் மருந்துமரம் போலகின்று கல்குதலை இயல்பாகக் கொளல்வேண்டும் நல்லவர்கள் ஒப்புரவென் றதைத்தான் சொல்வர்; இல்லறத்தாள் மனமகிழத் தலையளித்தல் இயல்பன்றோ விலைகொடுத்தும் பெறுவா ருண்டோ! (3:8) மேற்காணும் இப்பாடல், ஊருணி நீர்நிறைக் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (திருக்குறள் 215) பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடைய யான்கண் படின் (திருக்குறள் 216) என்னும் திருக்குறள்களை நினைவிற்குக் கொண்டு வருகின்றதன்றோ?