முன்னோர் மொழிபொருள் பொன்னே போல் போற்றல் திருக்குறட் கருத்துகளை மட்டுமன்றிச் சான்றோர் முதல் திருமுறைச் செல்வர்கள் வரையில் பலருடைய கருத்துகளைத் தம் மனத்துள் வாங்கி கவியரசு முடியரச அrl ஆங்காங்கே பாடல்களைப் பெய்து வைத்துள்ள நிறம் எண்ணி மகிழ்தற்குரியதாகும். ாாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி கல்லை வாழிய நிலனே (புறநானூறு 187) ஒளவையாரின் புறநானுாற்றுப் பாடலின் מעיל"וי பிழிவினைப் பின்வரும் பாடலிற் காணலாம். உருவினிற் சிறிய தவ்வூர் உளத்தினாற் சிறந்த மாந்தர் மருவியங் குறைத லாலே மதிப்பினில் உயர்ந்த தாகும் உருவுகண் டெள்ளல் வேண்டா ஒதுவ தறநூல் அன்றோ? உரியவர் நல்ல ரானால் ஒருநிலம் நல்ல தாகும் (1:8) திருவாசகம் தந்த திருவாதவூரரின் பாடலிற் சொக்கி நின்றவர் கதிரேசனார் என்பதை முடியரசனார் புலப் படுத்தும் பாங்கே தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். வள்ளலார் பாடலை அப்படியே அகழ்ந்து தந்து முடியரச னார் கதிரேசனாரின் ஈடுபாட்டினைக் காட்டுவது நெஞ்சை
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/243
Appearance