உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. tarr. 245 அமைக்குங்காலை அவையெல்லாம் ஒரிடத்திற் கூட்டப் பெற்று அழகிய அணிகலன் ஆவது போலச் சான்றோர் களும் எங்கெங்கோ பிறந்தாலும் ஒர் அரிய செயலை ஆற்றுவான் வேண்டி ஒரிடத்தில் ஒன்று கூடிச் செம்மை யான செயல் முடிப்பர் என்பது மேற்காணும் புறம் பாடலால் விளக்கமுறும் செய்தியாகும். அதுபோலப் பண்டித மணியார் தமிழ்ப் புலமை சான்ற பலருடனும் நட்புக் கொண்ட சிறப்பினைக் கவிஞர் விளக்கும் மாட்சி காண்க: நிலத்தடியில் அமைந்திருக்கும் பொன்னும் மற்றும் நீர்க்கடலில் கிடக்கின்ற துகிரும் முத்தும் மலைப்புலத்தில் விளைந்துயர்ந்த மணியுங்கூடி மாநிலத்தார் அணிகலன்கள் அமைக்குங்காலை கலத்தினிடை ஒருசேரத் தோன்றி யாங்குக் கலைபலவுங் கற்றுணர்ந்த சான்றோர் சேய்மை நிலத்தவர்தாம் என்றாலுங் கல்வி கேள்வி நிறைந்தொளிரும் மணியின்பாற் கலந்திருந்தார் (9:24) நகைக்கவை பண்டிதமணியாரிடம் நகைச்சுவையுணர்வு மிகுதி யாக இருந்தது. தம் பேச்சினிடையே நகையுதிர்ப்பது அவர் வழக்கம். இதனை நூலாசிரியர் துவலுந்திறம் பாராட்டத்தக்கது. தன்னை ஏமாற்ற வந்த போலித் துறவியிடம் பண்டித மணியார் முருகன் பற்றிக் கிளத்திக் கூறும் செய்தியில் நகை கொப்களிப்பதைக் காணலாம்.