பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் கம்ப பாடல்களில் பல இடைச் செருகலாக நுழைந்தவை எண், கூறிப் பல பாடல்களைத் தள்ளிவிட, அது கேட்ட பண்டி , மணி நகைச்சுவையுணர்வுடன் பின்வருமாறு உாை தாராம். சுவைமணி சிதம்பர நாதர் ஒருநாள் அவையிற் பேச எழுமுன் அறிமுகம் செய்ய எழுந்த துய்ய மணியார் பாட்டின் சுவையிற் பழகிய மணியிவர் கம்பன் பாடற் காசுகள் எடுத்துக் கொட்டுவார் தட்டுவார் கூடிய பாடலில் கம்பன் முத்திரை காணாக் காசிவை செல்லாக் காசெனச் செப்பி எறிவார்; படலம் பலவும் திடமுடன் எறிவார் இடைஇடைச் செருகல் என்றெடுத் தெறிந்திட ஒருவர் போதும்; பலரிவண் தோன்றின் கம்பனைத் தேடிக் கற்றுத் தொலைக்கும் வம்பே யில்லை என்றுமை வழங்க அன்றவ ரிருவரும் சிரித்தனர் ஆங்கே (8: நிலைமண்டில ஆசிரியப்பா 23-37) இது போன்றே ஒரு நாள் பண்டிதமணியவர்கள் தலைமை தாங்கிய கூட்டத்திற் பேசிய பேச்சாளர் ஒருவர், பலர் காலத்தைப் பொன்னெனப் போற்றுவதில்லையென்று குறிப்பிட்டுத் தாமே அக்குற்றத்திற்கு இலக்காகிப் அன்னெடு நேரம் பேசினதைக் கூட்ட முடிவில் தலைவர் முடிவுரையில் பண்டிதமணியார் பின்வருமாறு கூறி தகை யொலியைப் பிறப்பித்தாராம்.