பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛50 இலக்கிய ஏந்தல்கள் அடங்கொண்ட நோயதனால் அல்லலுக்கே ஆளாய்நிற் கின்றேன், காலன் வடங்கொண்டு வருங்காலம் வாராதோ எனைநோக்கி என்று நொந்தேன் கடங்கண்ட அம்பலத்து நாதனடி கண்ணினிநீ எனக்கும் ஆங்கோர் இடங்கண்டு வையென்று கவிமணியார் ஏங்கிமனம் பேத லித்தார் (16:12) நமது தமிழ்த் திருக்கோவில் முன்பிருந்து நாளெல்லாம் நாவசைத்த மணியின்ஓசை அமைதியுற ஓய்ந்ததம்மா! தமிழ்மாக்தர் அகங்குளிர இலக்கியத்தேன் வழங்கி வந்த கமழ்மணத்துக் கோற்குறிஞ்சி சாய்ந்த தம்மா! கையிருந்த கனியொன்று வீழ்ந்த தம்மா! இமிழ்கடல்மா ஞாலத்தின் இருள கற்ற எழுகதிரும் கடனாற்றி மறைந்த தம்மா! (16:16) உவமை நலம் ஒருகவிஞர் அவர் கையாளும் உவமைகளால் அளவிடப் பெறுகிறார் என்பர். உவமைகளை அமைப்பதி லும், தக்க இடந்தேர்ந்து அவைகளைக் கையாளுவதிலும் தான் ஒரு கவிஞனின் தேர்ந்த கவிதைத் திறன் தெளிவுறு வதாக இலக்கிய ஆய்வாளர்கள் அறைவர். இக்கூற்றின் வழிநின்று ஊன்றுகோல்’ எனும் சிறு காப்பியத்தை ஆராய்ந்து காண்போமானால் இக்காப்பியம் முழுவதும் பொருட் பொருத்தமுற அமைந்திருக்மும் உவமைகளைக் 5rr6ծմr6Սուն,