பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

İl, ır. 251 "குன்றின் மேலிட்ட விளக்கு என்னும் பழைய உவமை, விடுகதிர்போல் விளங்குகதி ரேசர் நெஞ்சின் விழைவிலுரு வானசபைத் தொடர்பால் குன்றில் இடுவிளக்கின் ஒளிபோலத் தமிழ்நா டெங்கும் இசைபரப்பித் தமிழ்பரப்பி விளங்க லுற்றார் (3:19) என்னும் பாட்டிற் புதுமையுடன் ஒளிரக் காணலாம். பண்டிதமணி அமைத்த சன்மார்க்க சபை நல்ல உழவனுக்கு வாய்த்த தன் செய்வயல் போன்றதன்றோ! இதனைக் கவிஞர் பின்வருமாறு குறிப்பிடுவர் : வண்குன்றத் தோளுடையான், உழைப்புக் கஞ்சான் உழவனுக்கு வயலொன்று வாய்த்த தைப்போல் பொன்குன்ற நகருறையும் புலவருக்குப் புகழ்விளைக்குஞ் சபையொன்று கிடைத்த தையா (3:21) 'வளர் பயிர்க்கு மழை என்றோர் உவமையும் (3:25) பிறிே தாரிடத்தில் இடம் பெற்றிருக்கக் காணலாம். பானைச் சோறுக்குப் பருக்கொன்று பதம்’ என்பது பழமொழி. அதனை உவமையாக்கிக் கவிஞர் உவகை ஊட்டும் திறம் காண்க கலம்மிகுந்த சான்றோராய் இவர்பாற் கற்றோர் நாவலராய் எண்ணிலராய் விளங்கு கின்றார் புலமையெனுங் கடலுக்குள் மூழ்கி மூழ்கிப் புதுப்புதுகன் முத்தெடுத்து மக்கட் கீந்து குலவிவரும் துணைவேந்தர் ஒளியால் மேன்மை கொண்டிலங்கும் மாணிக்கம் ஒருவர் ஆவார் உலையிலவிழ் பதம்பார்க்கப் பானைச் சோற்றுக் கொருசோறு போதாதோ போதும் போதும் i (10:20)