பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r - 25護* அண்டிசைக்கும் யாழோசை, குயிலின் பாட்டு வண்ணமயில் எழிலாட்டம், அருவி வீழ்ந்து கொண்டெழுப்பும் நன்முழவு, பிறவுங் கூடிக் கொழிக்கின்ற இன்பத்தைத் தமிழில் தோய்ந்த பண்டிதரின் மணிமொழியில் நாவு திர்க்கும் பாகயத்திற் பெற்றுணர லாகுமென்று பண்டைய கற் றமிழ்மொழியின் அழகு ணர்ச்சிப் பாட்டுக்குப் பொருளான பெரியார் சொன்னார் (8: 44) : பாட்டரங்கம் தமிழ்நாட்டில் அரங்க மேறிப் பாடுபவன் தமிழன்தான்; அந்தப் பாட்டைக் கேட்டிருக்கும் அவையினரும் தமிழ்மாந்தர்; கீர்த்தனையாம் கிருதிகளும் இவையே கேட்கும் காட்டமொடு வந்தவர்க்கோ விளங்கவில்லை நாமினியும் பொறுத்திருந்தாற் பயனே யில்லை வேட்டெழுந்து தமிழ்வேண்டும் என்று சொன்னோம் விளங்குகிற மொழிப்பாடல் வேண்டும் என்றோம் (11:6). இசைக்கிளியை மொழிக்கூண்டில் அடைக்க வேண்டி எழுகின்றார் என்றுகமைப் பழித்துச் சொன்னார் இசைக்குயிலைத் தமிழ்வானில் பறக்கா வண்ணம் இறகொடித்துப் பிறமொழிக்குள் அடைத்துவிட்ட வசைக்குரியார் யாவரெனத் தெரியா வண்ணம் வழிமாற்றித் திசைதிருப்பிக் காட்டி விட்டுத் தசைப்பிண்டத் தலையாட்டிப் பொம்மை முன்னர்த் தமிழ்விடுத்துப் பிறமொழியே பாடி வந்தார் (11:7)