பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

НА, гит, 25 7 இந்தியாவிற்கு வாணிகம் செய்ய வந்தது. இந்தியா பல்வேறு அரசர்கள் கீழும், சிற்றரசர்கள்.கீழும், நிலப்பிரபுக் கள் கீழும் சிதறுண்டு கிடந்த நிலைமையைப் பார்த்து விட்டு, அதனைத் தங்களுக்கு வாய்ப்பாகக் கருதிக் கொண்டு நாடு பிடிக்கத் தொடங்கினார்கள். விரைவில் அவர்கள் எண்ணமும் ஈடேறியது. இந்தியாவில் அவர்கள் ஆட்சி எழுந்த காரணத்தால் எல்லாத்துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆங்கிலக் கல்வி எங்கும் பரவிய தால் சில நன்மைகள் விளைந்தன. மேலை நாட்டாரோடு இந்தியர்கள் தொடர்பு கொண்டனர். எனவே அவர்கள் சமய வாழ்விலும் சிற்சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இவ்வாறு 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் சமய, சமூகச் சீர்திருத்தங்களை ஏற்படுத்திய பலருள் சிறப்பாகக் குறிக்கத்தக்கவர் இராஜாராம் மோகன்ராய் அவர் களாவர். இவரை இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்றும், இந்து சமயச் சீர்திருத்தவாதிகளின் தந்தை என்றும், பெண்களுக்குச் சம உரிமை கிடைக்கப் பாடுபட்ட பெருந்தகை என்றும், பிற்காலத்தே எழுந்த தேசிய இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடி என்றும் முறைப்படச் சொல்லுவர். இராஜாராம் மோகன்ராய் மேற்கு வங்காளத்தில் பர்துவான் மாவட்டத்தில் ராதா நகர் என்ற ஊரில் 1772-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் நாள் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் தொடக்கத்தில் பாட்னா நகரத்திலிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் பாரசீக மொழியும், அரபு மொழியும் படித்தார். தம்முடைய பதினாறாவது வயதிலேயே இந்துக்களின் விக்கிரக ஆராதனைக்கு மறுப்பு ஒன்றினை எழுதித் துண்டு பிரசுரமாக வெளியிட்டார்.