பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இலக்கிய ஏந்தல்கள் நெஞ்சுகளின் மறுபிறப்பு சோசலிசம் திறம்பாத ஒருமைநலம் சோசலிசம் வஞ்சகத்தின் மென்னியிலே புதுயுகத்தின் வலியகரம் விழுவதுவே சோசலிசம் என்று சோசலிசக் கட்டியங் கூறுகின்றது. சாலையாரின் பாடல் சாலை இளந்திரையன் பாடல்களில் வேண்டாத பழமை, மூடநம்பிக்கை ஆகியவற்றை முறியடிக்கும் வலிமை முத்தாய்ப்பாகக் கருத்தை வெளிப்படுத்தத் துணை நிற்கின்றது. எழுதிவைத்த புத்தகத்தில் மூழ்கிப் போவாய் எதிரிருக்கும் மானுடனைப் படிக்க மாட்டாய்! என்ற அடிகள் சிந்தனைக்குரியவை. கம்பதாசன், சூரியனும் ஒரு தொழிலாளி-தினம் சுற்றும் உலகும் தொழிலாளி வாரிதி தானும்,தொழிலாளி-எதிர் வந்திடும் காற்றும் தொழிலாளி மாரியதுவும் தொழிலாளி-விண் மலரும் உடுக்கண் தொழிலாளி பாரில் தொழிலாளர் சக்தியின்றேல்- இந்தப் பாரும் உண்டோ? ஒரு சீரும் உண்டோ? என்று பாடி மானுட உயர்வும் தொழிலாளர் மேன்மையும் துலங்கப் பாடினார். மேலும் தொழிலாளர் தம்முள் ஒருவராகவே நின்று குரல் தரும் கம்பதாசன்,