на гит, 26 I ாக நம்பினார். எனவே இந்துக் கல்லூரி ஒன்றினை பரிபடுத்தி, ஆங்கிலக் கல்வியினையும் நவீன அறிவியற் அலையினையும் நம் நாட்டு மக்கள் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். 'சம்வாட் கெளமுடி’ என்னும் பெயரில் ஒரு |த்திரிகையினைத் தொடங்கி, அதன் ஆசிரியராக அமர்ந்து தம் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். 1923 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பத்திரிகை சட்டத் விற்கு எ தி ரா. க ப் பத்திரிகை உரிமைகளுக்காகப் போராடினார். தலைமை நீதிமன்றத்தின் அப்பத்திரிகைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிப் பத்திரிகைச் சுதந்திரத் தைப் பாதுகாக்கப் பாடுபட்டார். கணவனோடு உடன்கட்டை ஏறும் சதி என்னும் கொடிய பழக்கம் 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நிலவிவந்த கொடிய பழக்கமாகும் பென்டிங் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த காலத்தில் இந்தப் பழக்கம் உச்சநிலையை அடைந்தது. கணவி னுடன் உடன்கட்டை ஏறவிரும்பாத பெண்களையும் பலவந்தப்படுத்தி, கொடுமைப்-படுத்திக் கணவனை எரியூட்டும் ஈமத்தீயில் தள்ளிக் கொன்றனர். நெருப்பில் விழுந்து இறப்பதற்கு அஞ்சித் தப்புவதற்கு முயன்றவர் களைப் பிடித்துக் கயிற்றினால் கட்டி நெருப்பில் தள்ளித் தடியால் அடித்தும் கொன்றனர். இத்தகைய கொடுமை யான செயல்களைத்தான் பிரம்ம சமாஜத்தைச் சார்ந்த இராஜாராம் மோகன்ராயும், துவாரகநாத் தாகூரும் கண்டித்தனர். இந்துக்களின் சமய நூல்களில் இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு ஆதாரம் இல்லை என்று எடுத்துக் கூறினர். இ.ஏ.-17
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/261
Appearance