பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 இலக்கிய ஏந்தல்கள் 1829 ஆம் நூண்டில் நவம்பர் மாதத்தில் இந்து விதவைகள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைச் சட்டப்படி நிறுத்திவிடுவதற்காகப் பென்டிங் பிரபு சில முன்னேற்பாடு களைச் செய்து டிசம்பர் மாதத்தில், உடன்கட்டை ஏறுவதைத் தடுத்து ஒரு சட்டம் இயற்றினார். அதன்படி இந்தக் கைம்பெண்களை உயிருடன் புதைப்பதும்' எரிப்பதும் குற்றமாகக் கருதப்பட்டன. உடன்கட்டை ஏறுமாறு பிறரை வற்புறுத்துபவர்களுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஆங்கில ஆட்சிக்குட்பட்ட இந்தியா முழுவகிலும் அமுலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான வங்காளிகள் பென்டிங் பிரபுவிடம் விண்ணப்பம் செய்தனர். அவர், அவர்களைப் பிரிவிக் கவுன்சிலுக்கு முறையிட்டுக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார். அவர் களும் பிரிவிக் கவுன்சிலுக்கு முறையிட்டுக் கொண்டனர். இதனை எதிர்த்து இராஜாராம் மோகன்ராய் பிரிவுக் கவுன் சிலுக்கு விண்ணப்பம் செய்துகொண்டார். 1832 ஆம் ஆண்டில் வங்காளியர் சிலர் பிரிவிக் கவுன்சிலுக்குச் செய்து கொண்ட மேல் முறையீடு தள்ளப்பட்டது. இவ்வாறு சதி என்னும்கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கம் அடியோடு அழிந்துபோக இராஜாராம் மோகன்ராய் காரணகர்த்த ராக இருந்தார். i இராஜாராம் மோகன்ராய்கு டெல்லி அரசர் ராஜா' என்னும் பட்டம் வழங்கினார். அவ்வரசருடைய துரதுவ ராக அவர் இங்கிலாந்து நாட்டிற்கு 1830-ல் சென்றார். அங்கு இவர் நன்முறையில் வரவேற்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியாரும் இவருக்கு நல்ல வரவேற்பு ஒன்று தந்தார்கள். இங்கிலாந்து அரசர் நாலாம் வில்லியம் என்பவரிடம் அழைத்துச் சென்று ஆறிமுகப் படுத்தி வைத்தனர்.