பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்கனல் வ.வே.சு. ஐயர் இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரததேசம் தன்னை வாழ்விக்க வந்தவர்கள் பலர். கட்டுண்டோம் பொறுத்திருப்போம்; காலம் மாறும் என்று நம்பியவர்கள் பலர். ஆயினும் அவர்களில் சிலர் புரட்சிப் பொறியாய் நின்று தாயகம் விடுதலை பெறவேண்டும் என்று வன்முறையில் நம்பிக்கை வைத்துப் பாடுபடும் அளவிற்குத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவர் வ.வே.சு. ஐயர் அவர்களாவர். மராட்டிய மண்ணின் மாவீரர் விநாயக தாமோதர சவர்க்காரி அவர்களோடு இலண்டனில் தொடர்பு கொண்டு வ.வே.சு ஐயர் பழகித் துப்பாக்கிப் பயிற்சியும் பெற்றுப் பின்னாளில் பாண்டிச்சேரியில் திருநெல்வேலி அப் கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற தியாகி வாஞ்சிக்குத் துப்பாக்கிப் பயிற்சி தந்திருந்தாலும்கூட, அவர் வாழ்வில் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளராக விளங்கிய திறத்தினை மறந்து விடுவதற்கில்லை. அதுவும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முகிழ்த்து வளர்ந்த புதிய இலக்கியத் துறையான சிறுகதைத் துறையின் முதல்வராக வும் விளங்குவது என்றும் நினைவிற்கொண்டு போற்றத் தக்கதாகும். சிறுகதை இலக்கிய வானில் விடிவெள்ளி என்றும், திறனாய்வுத் துறையின் முன்னோடி என்றும் வ.வே.சு. ஐயர் அவர்களை நாம் பாராட்டலாம். சங்க காலச் சோனாட்டின் தலைநகராம் திருச்சிராப் பள்ளிக்கு அணித்தேயுள்ள அழகுச் சிற்றுார் வரகனேரியே