£66 இலக்கிய ஏந்தல்கள் களையும் படித்து உரிமைக் காற்றை உள்ளே இழுத்தார். ஆங்கிலம், இலத்தீன், வரலாறு, கணிதம் முதலிய துறை களில் ஆழப் பயின்று அத்துறைகளில் வித்தகரானார். அக்கலையில் இவரோடு உடன்பயின்றவர் டாக்டரி டி. எஸ்.எஸ். ராஜன் ஆவர். இளமையில் மணம்முடித்து வைத்து விடுவது என்பது அந்நாளில் பெற்றோர்கள் மேற்கொண்ட செயலாகும். அம்முறையில் எப்.ஏ. தேறிய ஐயர், பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து பி. ஏ. வகுப்பிற் சேர்ந்து படித்தார். 1899ஆம் ஆண்டில் பி. ஏ. தேறினார். பி.ஏ. வகுப்பில் வரலாறு, பொருளாதாரம், இலத்தீன் முதலிய பாடங் களை விரும்பிக் கற்றார் இலத்தீன் பாடத்தில் மாகாணத் தில் முதல்வராகத் தேறினார். அந்நாளில் படித்துத் தேர்ச்சி பெற்றவர் அரசாங்கப் பணியில் அமரவே விரும்புவர். இன்றேல் அந்நாளில் அதிக வருவாய் வந்ததும், சுதந்திரமானதுமான வழக் கறிஞர் தொழிலையே பலரும் பெரிதும் விரும்பினர். நம் ஐயரவர்களும் 1901ஆம் ஆண்டில் சட்டத் துறையில் தேர்ச்சி பெற்று முதல் கிரேடு பிளீடர் ஆனார். 1962இல் திரிசிரபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொழில் நடத்தத் தொடங்கினார். நான்கு ஆண்டுகள் அப்பணி தொடர்ந்தது. ஐயருடைய வாழ்க்கைத் துணைவியார் பாக்கியலட்சுமி அம்மையாரின் பெரிய தந்தையார் பிள்ளை பசுபதி ஐயரென்பவர் ரங்கூனில் பெருஞ் செல்வராய் வாழ்ந்து வந்தார். அவர் ஐயரவர்களை ரங்கூனுக்கு அனுப்பி தம் வினிகத்துறை வாழ்க்கையை மேற்பார்வையிடச் சொன்னார். 1907இல் ரங்கூன் சென்ற ஐயரவர்கள் அங்கிருந்த ஆங்கில பாரிஸ்டர்"
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/266
Appearance