芝6& இலக்கிய ஏந்தல்கள் யானார். இசையிலும் நடனத்திலும் ஈடுபட்ட அவர்தம் இளகிய மனம் புரட்சியால் ஈர்க்கப்பட்டு வன்முறையில் திரும்பியது. சவர்க்கார் எழுதிய இந்திய உரிமைப்போர்' என்னும் மராட்டி நூலினை ஐயரவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்நூல் படிப்பவர் மனத்தில் புரட்சித் தீயை வளர்த்தது. சவர்க்காரும் ஐயரும் இந்திய விடுதியில் உறைந்த மாணவர்கட்கு நாட்டுப் பற்றை ஊட்டினர். மாஜினி, கரிபால்டி ஆகிய புரட்சி வீரர்களின் வரலாறு அவர்களுக்குப் பாடங்களாகப் போதிக்கப்பட்டன அந்த இரண்டு புரட்சியாளர்கள் சென்ற நெறியிலேயே சென்று வன்முறையில் நாட்டை மீட்க வேண்டுமென்று உறுதி செய்தனர். வாரம் ஒருமுறை நடைபெறும் கூட்டத் தில் புரட்சிக் கனல் பேச்சில் தெறிக்கும். படைக்கலப் கயிற்சியும் அவ்விடுதியில் தரப்பட்டது. குறிப்பாகத் துப்பாக்கி சுடும் பயிற்சியும் மற்போர்ப் பயிற்சியும் மேற் கொள்ளப்பட்டன. போர் நூலும் விரும்பிப் பயிலப் சட்டது. இந்திய விடுதிக்கு ஒருநாள் நாசிக்கைச் சேர்ந்தவரும் சவர்க்காருக்குத் தெரிந்தவருமான கீர்த்திகர் என்பவர் வந்தார். அவர் ஸ்காட்லண்டு யார்டு போலீசாரின் உளவாளியாகத் தங்கி இந்திய விடுதியில் வசிப்போரின் தேச விரோதச்செயல்களைக் கவனித்து ரகசியக் குறிப்பு களைப் போலீசுக்கு அனுப்பி வைத்தார். ஒருநாள் குட்டு உடைந்தது கீர்த்திகரைத் துப்பாக்கி முனையில் வ.வே. சு. ஐயரவர்கள் மிரட்டி, இனி இத்தகைய உணவு வேலை கள் அவருடைய உயிருக்கு ஆபத்தாய் முடிந்துவிடும் என்றும், தாம் எழுதித் தரும் குறிப்புகளையே போலீசுக்கு, அனுப்ப வேண்டும் என்றும் வற்புறுத்தினார். பயந்து நடுங்கி ஐயரின் காலைப் பிடித்துக் கொண்ட கீர்த்தி கர்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/268
Appearance