பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 இலக்கிய ஏந்தல்கள் மேம்பட்ட பொருள் உலகில் எதுவுமில்லை. எனவே உண்மை வெல்லும்; எனவே அவ்வுண்மை அறப்போரால் கிட்டும், என்றும் உண்மையே இறுதியில் வெற்றி பெறும்’ என்று சொன்னார் அறப்போரில் நம்பிக்கை கொள்ளாத ஐயரவர்களையும் மோகனதாஸ் காந்தியின் புன்னகை முகம் ஈர்த்தது. அவரிடம் பெருமதிப்புக் கொண்டார். காந்தியடிகளை விருந்துக்கு அழைத்தார். சைவ உணவு மட்டும் விருந்திற் பரிமாறப்பட்டால் தாம் வருவதாக உடன்பட்டார் அண்ணல் காந்தி. ஒரு சனிக்கிழமையன்று சைவ உணவு தயாரிக்கும் வேலை தொடங்கியது. டாக்டர் ராஜன் உட்பட அறுவர் சமையற்கட்டிற் பணியாற்றினர். மெலிந்த உருவினர் ஒருவரும் தாமாகவே வந்து சமையல் பணியிற் கலந்துகொண்டார். சமையற்பணி முடிந்ததா எனக் காணவந்த வ.வே.சு ஐயர் திடுக்கிட்டார். காரணம் அம்மெலிந்த திருவுருவினர் வேறு யாருமில்லை. காந்தியடி கள்தான் சமையற்கட்டில் உதவி செய்து கொண்டிருந் தார். பின்னர் விருந்து முடிந்தது காந்தியடிகள் வன்முறைக் கிளர்ச்சியை விட்டு அமைதியான வழியிற் போராட்டம் நடத்தி இந்தியாவை மீட்கவேண்டும் என்றார். பின்னர்ப் பேசிய சவர்க்கார் மாறுபட்ட கருத்தைப் புரட்சிப் பொறியென வெளியிட்டார் கூட்டம் முடிந்தது. காந்தியடிகளும் தம் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஐயரும் மாற்றிக் கொள்ளவில்லை. உண்மையும் விடாமுயற்சியும் உள்ள ஒத்துழையாதார்’ என்று ஐயரவர்களைப் பின்னாளில் காந்தியடிகள் யங் இந்தியா' இதழிற் பாராட்டி எழுதினார். இங்கிலாந்துப் போலீசு ஒற்றர்களின் முற்றுகை மிகுதியானதாலும் அவர்கள் இந்திய விடுதி மாணவர்க்கு நேரடியாகவும் மறை முறைமுகமாகவும் தொல்லைகள் கொடுக்கத் தொடங்கியதாலும், வ.வே.சு பைன்