பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逻78 இலக்கிய ஏந்தல்க ள் அதுபோழ்தே இந்தியாவில் நாசிக்கில் ஜாக்சன் கொலை நடந்தது. அக்கொலைக்கு விநாயக தாமோதா சவர்க்காரே துப்பாக்கி அனுப்பினார் எனப் போலீசார் அவர் மது நடவடிக்கை எடுத்தனர். சவர்க்கார் இலண்டன் சிறையில் இரு திங்கள் இ ந்தனர். ஐயரவர்கள் சிறைக்குச் சென்று சவர்க்காரைப் பார்த்தார். "நடந்ததை நினையாமல் நடக்க வேண்டியது குறித்துச் சிந்திக்க வேண்டும்’ என இருவரும் முடிவு கட்டினர். ஐயர் அவர் களைச் சிறையிலிட முயற்சி நடந்தது. ஐயர் ஏற்கென:ே தாடி வளர்த்திருந்தார். உச்சிக் குடுமி ஆசாமியைத் தேடி அலுத்தனர் போலீசார். பாரிசுக்குப் புறப்பட்ட ஐயர் அகாலியர்போல் வேடம் புனைந்து சென்றார். அவர் கையிலிருந்த பெட்டியின் மேல் வி.வி எஸ். (V.S S.) என்று. பெயர் இருந்தது. கப்பலிற் செல்லும்போது ஒரு போலீசுக் காரன் அவர் முன் தோன்றி நண்பர் வி.வி.எஸ். ஐயரே, உமக்கொரு தந்தி" என்றான். ஐயரே சற்றும் அயராமல் "இந்தத் தந்தி வி.வி.எஸ். ஐயருக்குத்தானே! என் பெயர் வே, விக்கிரம் சிங்கு" என்று இந்தஸ்தானியிலேயே விடை. யளித்தார். இவ்வாறு போலீசிற்கு டிமிக்கி’ கொடுத்துப் பாரீசு நகர் சேர்ந்து இந்திய விடுதலைக்கு ஆதரவுகாட்டிய காமா அம்மையார் வீட்டில் சென்று தங்கினார். இந்த நாளில் இலண்டனிலிருந்து சவர்க்கரை விசாரனைக் கைதியாகக் கொண்டு வந்த கப்பல் பிரெஞ்சு நாட்டின் தென் துறைமுகமாக மார்செயில்சுக்கு வந்து நின்றது. சவர்க்கார் காலைக் கடன் முடிப்பதாகக் கூறிக் கப்பலின் கழிப்பறையின் உள்சென்ற சவர்க்கார் அங்கிருந்த பொந்தின் வழியே தப்பிக் கடலில் குதித்து நீந்திக் கரை சேர்ந்தார். ஏமாந்து இங்கிலாந்து போலீசார் அவரைத் துரத்தி வந்தனர். அங்கு ரோந்து வந்து கொண்டிருந்த பிரெஞ்சுப் போலீஸ்காரன் சவர்க்கரைப் பிடித்துக்