事華彗*- 273 கொண்டான். தொலைவிலிருந்து இந்நிகழ்ச்சியைப் பாரித்துக் கொண்டிருந்த வ.வே.சு. ஐயரும் காமா அம்மையாரும் 'இது பிரெஞ்சு எல்லை; இவரை பங்கிலாந்துப் போலீசாரிடம் ஒப்படைப்பது சட்டத்திற்கு முரண்பட்டதாகும்” என்று கூறித் தடுத்தனர். ஆயினும் இங்கிலாந்துப் போலீசார் சவர்க்காரைத் துரக்கிச் சென்று, பின்னர் அவரை அந்தமானில் கைதியாகக் காவலில் வைத்தனர். பிரெஞ்சுப் போலீசாரின் அடாத செயலை rதிர்த்து பிரெஞ்சு ஜனாதிபதிக்கு ஜயர் கடிதங்கள் எழுதினார். பயன் விளையவில்லை. நாட்டுப்பற்று மேலோங்கிய நிலையில் வ.வே.சு ஐயரவர்கள் இண்டனில் தாம்பெற்ற 'பாரிஸ்டர்’ பட்டத்தைக் கிழித்தெறிந்தார். காந்தியடிகள் ஆங்கிலம் படித்தவர்கள் ஆங்கிலப்பட்டத்தைத் துறப்பதற்கு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுவதற்குப் பத்து ஆண்டுகள் முன்னரேயே தாமாகவே வலுவில் பட்டத்தைத் துறந்தவர் தீரர் வ.வே.சு. ஐயர் அவர். ஒருநாள் முகம்மதிய பக்கிரி ஒருவர் பாண்டிச் சேரியில் மண்டயம் சீநிவாசாச்சாரியார் வீட்டின் முன் வந்து நின்றார். வீட்டின் கதவைத் தட்டினார். ஆச்சாரியார் வெளியே வந்தார். "தாந்தே வந்ததோ' என்று வினவினர் பக்கிரி, வினாவினையும் வினாவின் பொருளினையும், வினவியவரின் குரலினையும் உணர்ந்து கொண்டு ஆச்சாரியார் அவரே வ.வே.சு ஐயரெனத் தெரிந்து அவரைத் தழுவி வரவேற்றார். பாரிலிசிருந்து கார்ச்சி கனவான் வேடத்திற் புறப்பட்டுப் புதுவைக்கு முகமதிய பக்கிரி வேடத்தில் வந்து சேர்ந்த வீரர் வ.வே.சு. ஐயரே ஆவர்.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/273
Appearance