உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்தென்றல் திரு. வி. க. தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றிய சான்றோர்கள் பலராவர். காலத்திற்குக் காலம் தமிழ் நாட்டில் தோன்றிவரும் சான்றோர்கள் தமிழ்மொழிக்கும். தமிழ்இனத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் நிலைத்த தொண்டினை ஆற்றியுள்ளனர். அவர்தம் திருப்பெயர்கள் நாட்டு வரலாற்றில் இடம்பெறும் அளவிற்கு அவர் களுடைய தொண்டு துலங்குவதால் அவர்கள் தமிழ் வாழும் அளவும், தமிழ் இனம் உள்ள அளவும் தமிழ்நாடு நிலைத்திருக்கும் அளவும் நினைவு கூரப்படுவர் என்பதில் ஐயமில்லை. தான் வாழும் ஊரிற் சான்றோர் பலர்அதிலும் கொள்கைச் சான்றோர் பலர் வாழும் காரணத் தினாலேயே பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான் தமக்கு வயது பல கடந்தும் நரையிலவாய்த் திகழ்வதாகச் சொன்னார். இந்த உலகம் தாங்கப்பெற்று வருவற்கே காரணம் சான்றோர் வாழ்வதனாலேயாகும் என்று திருவள்ளுவர் பெருமானும் குறிப்பிட்டுள்ளார். சென்ற நூற்றாண்டின் இறுதியில் சென்னையை அடுத்துள்ள துள்ளம் என்னும் சிற்றுாரில் திருவாரூர்க் குடும்பம் ஒன்று வாழ்ந்தது. அக்குடும்பத்திற் பிறந்தவரே நம் திரு.வி. கலியாணசுந்தரனார். எளிய குடும்பத்திற். பிறந்து எளிமையிற் பற்றுக்கொண்டு வாழ்ந்த அவர்தம் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் வாழ்விலும் உயர்வும்: செம்மையும் புலப்பட்டன. அவருடைய பேச்சு இளைஞ. ரையும் கவர்ந்தது; முேதியோர்க்கும் விருந்தாயிற்று: அவர்தம் எழுத்துபீேடும் பெருமிதமும் நிறைந்து தமிழ்